விவசாயத்துக்கு முக்கியத்துவம்!

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறை வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பான பாஜக அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகான முதல் பட்ஜெட் என்பதாலும் இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. குறிப்பாக விவசாயத் துறை மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில், அருண் ஜேட்லி வெளியிட்ட விவசாயத் துறை மேம்பாட்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் பின்வருமாறு:
>>2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
>>உற்பத்திச் செலவுகளைக் குறைத்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும், விவசாயத் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
>>வேளாண் துறையில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வாயிலாக உள்கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சந்தை வாய்ப்புகள் உயர்த்தப்படும்.
>>விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
>>விவசாயக் கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும்.
>>வேளாண் சந்தை மேம்பாட்டு நிதியாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
>>தேசிய மூங்கில் மறுசீரமைப்பு திட்டத்தைத் தொடங்குவதற்கு ரூ.10,000 கோடி மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.