மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

எந்த மதத்துக்கும் விரோதியல்ல!

எந்த மதத்துக்கும் விரோதியல்ல!

இந்து மதம் உட்பட எந்த மதத்துக்கும் தான் விரோதியல்ல என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.

பிப்ரவரி 21ஆம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியல் பயணம் தொடர்பாக நற்பணி மன்ற நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்திவருகிறார். இந்து மதத்துக்கு எதிரான போக்கை அவர் கடைப்பிடிக்கிறார் என விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில், தான் எந்த மதத்துக்கு எதிரானவன் அல்ல என அவர் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆனந்த விகடனில் அவர் எழுதிவரும் கட்டுரையில்,”நான் சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்கிற தோற்றத்தை உண்டாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். இந்து விரோதி என்கிறார்கள் சிலர். வீட்டிலேயே பக்தர் சந்திரஹாசனை வைத்துக்கொண்டு நான் எப்படி இந்து விரோதியாக இருந்திருக்க முடியும். சுயமாக சிந்திக்கும் வயது வரும்வரை என் பேச்சைக் கேள்; அதன் பிறகு உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றேன், மகள் ஸ்ருதியிடம். ஆனால் இன்று அவள் தீவிர பக்தை. அதற்காக அவளை நான் வெறுக்க முடியுமா? நான் இந்து விரோதி அல்ல. இதேபோல்தான் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பார்க்கிறேன். நான் யாரின் விரோதியும் அல்ல. என் நற்பணி மன்றத்தாரிடமும் இதையேதான் பின்பற்றுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 1 பிப் 2018