மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

பெண் துப்பறிவாளராகும் த்ரிஷா

பெண் துப்பறிவாளராகும் த்ரிஷா

குற்றப்பயிற்சி படத்தில் பெண் துப்பறிவாளராக நடிக்க இருக்கிறார் நடிகை த்ரிஷா.

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வர்ணிக் குற்றப்பயிற்சி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 1980-களின் காலகட்ட பின்னணியில் இப்படம் உருவாகவிருக்கிறது. இதில், பெண் துப்பறிவாளராக நடிக்க இருக்கிறார் த்ரிஷா. மேலும் நடிகை சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் போஸ்டரை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் வர்ணிக் பேசுகையில், “ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு கொலையும், கொலையின் பின்னணியும் துப்பு துலக்கும் விதத்தில் விறுவிறுப்பான திரைக்கதையாக இருக்கும். இந்தப் படத்தில் த்ரிஷா துப்பறிவாளராக நடிக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் முதன்மை கதாபாத்திரம் பெண் துப்பறிவாளராக நடிப்பது இதுவே முதல் முறை. முதல் இந்திய பெண் துப்பறிவாளரான ரஜினி பண்டித் அவர்களை உத்வேகமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பாபு குமார் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். ரதன் இசையமைக்க மதன் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பாக ஜி.விவேகானந்தன் தயாரிக்கிறார்.

10வருடங்களுக்கும் மேலாகத் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வரும் த்ரிஷா சக நடிகைகளான நயன்தாரா, அனுஷ்காவைப் போன்று பிரதான கதாபாத்திரம் கொண்ட கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 1 பிப் 2018