மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

தமிழில் அறிமுகமாகும் இந்திய அழகி!

தமிழில் அறிமுகமாகும் இந்திய அழகி!

மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஷெர்லின் சேத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

உலக அழகியிலிருந்து உள்ளூர் அழகிகள் வரை யாராக இருப்பினும் பட்டம் வென்ற பின் பெரும்பாலும் அவர்கள் தேர்ந்தெடுப்பது சினிமா துறையை தான். இதற்கு ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா என பல உதாரணங்கள் உள்ளனர். அதே பாதையை ஷெர்லினும் தேர்ந்தெடுத்துள்ளார்.

‘எஃப்பிபி கலர்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா 2017’ போட்டியில் தமிழ்நாடு சார்பாக கல்ந்துகொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஷெர்லின் காசு மேல காசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இது தொடர்பாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “காமெடி த்ரில்லர் ஜானரில் தயாராகும் காசு மேல காசு படத்தை பிரான்ஸிஸ் இயக்குகிறார். இதில் இந்திய அழகி ஷெர்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஷெர்லின் சம்மந்தப்பட்ட காட்சிகள் மொரீஷியஸில் 25 நாள்கள் படமாக்கப்பட்டது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளனர்.

ஷெர்லின் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் விரைவில் அறிமுகமாகவுள்ளார். தெலுங்கில் கதை கேட்டு வருகிறார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 1 பிப் 2018