மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

விலை வீழ்ச்சியால் அழியும் தக்காளி!

விலை வீழ்ச்சியால் அழியும் தக்காளி!

தெலங்கானாவின் அதிலாபாத் மாவட்ட விவசாயிகள் விலை வீழ்ச்சியால் தக்காளி பறிப்பதைக் கைவிட்டு இழப்புகளைத் தாங்க தயாராகி வருகின்றனர்.

தெலங்கானாவின், அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள இந்திரவெல்லி கிராமத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடியைப் பரவலாக மேற்கொண்டிருந்தனர். தற்போது அறுவடைக்குத் தயாராகியுள்ள தக்காளியைப் பறிக்காமல் செடிகளிலேயே அழிய விட்டுள்ளனர். தக்காளியின் விற்பனை விலையைக்காட்டிலும், அதைப் பறிப்பதற்கான செலவும், போக்குவரத்துச் செலவும் அதிகமாகவிருப்பதே விவசாயிகளின் இந்த முடிவுக்குக் காரணமாகும்.

இப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து தக்காளியை கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் தக்காளிக்கு கிலோ இரண்டு வரை மட்டுமே விலை பேசுகின்றனர். ஆனால், சந்தையில் தக்காளி கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 ரூபாய் வரை விற்பனையாகிறது. தக்காளியை உற்பத்தி செய்த விவசாயிகளைக்காட்டிலும் இடைத்தரகர்கள் கூடுதல் லாபம் ஈட்டும் வகையிலான நடைமுறை தற்போது நிலவி வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். சில விவசாயிகள் உற்பத்தி செய்த பயிர்களைக் கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018