மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

மொபைல் எண் பரிமாற்றுக் கட்டணம் குறைப்பு!

மொபைல் எண் பரிமாற்றுக் கட்டணம் குறைப்பு!

மொபைல் எண் பரிமாற்றுக் கட்டணத்தை 79 சதவிகிதம் குறைத்துள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.

மொபைல் எண்ணை வேறு நெட்வொர்க் இணைப்புக்குப் பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணம் இதுவரையில் 19 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் இக்கட்டணத்தைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 4 ரூபாயாகக் குறைப்பதாக ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொபைல் எண் பரிமாற்றுச் சேவைகளுக்கான செலவுகள் குறைந்துள்ளதாலும், பரிமாற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் தற்போது சேவைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக டிராய் காரணம் தெரிவித்துள்ளது.

மொபைல் எண் பரிமாற்றக் கட்டணம் குறித்து டிசம்பர் மாத மத்தியிலிருந்தே டிராய் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. அதன் பின்னர் ஜனவரி 16ஆம் தேதி திறந்தநிலை கருத்துக்கேட்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இதுபற்றி விவாதிக்கப்பட்டது. 2015 ஜூலை 3ஆம் தேதி முதல் மொபைல் எண் பரிமாற்றக் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களைச் சேகரித்து, அதனடிப்படையில் தற்போது கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 1 பிப் 2018