மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

தேதியை அறிவித்த சோனி!

தேதியை அறிவித்த சோனி!

சோனி நிறுவனத்தின் புதிய மூன்று மாடல்களின் வெளியீட்டு நாள் மற்றும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னனி மொபைல் தயாரிக்கும் நிறுவனமான சோனி கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற CES நிகழ்ச்சியில் புதிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்தது. இதுவரை ப்ரீமியம் மாடல்களில் மட்டும் பிங்கர்பிரிண்ட் வசதிகளைச் சேர்த்து வந்த சோனி நிறுவனம் தற்போது குறைந்த விலையில் வெளியிட உள்ள மாடல்களான புதிய XA 2, XA 2 அல்ட்ரா மற்றும் L2 ஆகியவற்றில் பிங்கர்பிரிண்ட் வசதியை வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை சோனி நிறுவனம் வெளியிட்ட மாடல்களில் குறைந்த விலைக்கு அதிக வசதிகளை கொண்டுள்ள மாடல்கள் இவை என்றே கூறலாம்.

இந்த மாடல்கள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதில் இருந்து பயனர்கள் இதன் விலை மற்றும் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் 3GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல்கள் ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக XA 2 ரூ.22,300 என்றும் XA 2 அல்ட்ரா ரூ.28,700 என்றும் L2 ரூ. 16,000 என்றும் விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த மாதம் (பிப்ரவரி) 16 ஆம் தேதி அமெரிக்காவில் அனைத்து மாடல்களும் வெளியாகும் என்றும், இந்தியாவில் இந்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகும் எனவும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறந்த கேமரா வசதிகளைக் கொண்டுள்ள இந்த மாடல்கள் புகைப்பட பிரியர்களுக்காக பிரத்யேக வடிவமைப்பில் வெளியிடப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 1 பிப் 2018