மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

ஷாருக் கானின் வீடு பறிமுதல்!

ஷாருக் கானின் வீடு பறிமுதல்!

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் பண்ணை வீட்டை பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கான், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அவருக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டம் அலிபாக் கடலோரத்தில் பல பண்ணை வீடுகள் சொந்தமாக உள்ளன. அந்தப் பண்ணை வீடு மிகப் பிரமாண்டமானது. சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தப் பண்ணை வீட்டில், அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பண்ணை வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 250 கோடி எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஷாருக் கானின் பண்ணை வீடு குறித்து விசாரித்து வந்தனர். அதில் ஷாருக் கான் தனது பண்ணை வீட்டை பினாமி ஒருவரது பெயரில் நிர்வகித்து வந்ததாகவும் அந்தப் பண்ணை வீட்டுக்கு உரிய அனுமதிகளை ஷாருக் கான் பெறாததும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வருமான வரித்துறை சட்டம் பிரிவு 24-ன் கீழ் நடவடிக்கை எடுத்து பண்ணை வீட்டை முடக்கியுள்ளார்கள். தற்போது அந்தப் பண்ணை வீடு பினாமி சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 1 பிப் 2018