மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

ரேக்ளா ரேஸுக்குத் தடையா?: சூர்யா கிளப்பிய சர்ச்சை!

ரேக்ளா ரேஸுக்குத் தடையா?: சூர்யா கிளப்பிய சர்ச்சை!

கார்த்தி நடிக்கும் கடைகுட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தைப் பார்வையிட்ட சூர்யா சில காட்சிகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்ற அது தற்போது அந்தப் படம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கிராமப்புற பின்னணியில் பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ரேக்ளா ரேஸ் காட்சி படமாக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்புக்கு முன்பாகவே விலங்குகள் நல வாரியத்தில் படக்குழு 211 காளைகளையும், 32 சேவல்களையும் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது. உச்ச நீதிமன்றம் ரேக்ளா பந்தயத்திற்கு தடை விதித்திருப்பதாகக் கூறி விலங்குகள் நல வாரியம் மனுவை நிராகரித்தது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ரேக்ளா பந்தயக் காட்சிகளை படக்குழு படமாக்கியது. அந்த வீடியோக் காட்சிகளை சூர்யா பகிர இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகியுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் இந்த விவகாரம் குறித்து விலங்குகள் நல வாரியத்திடம் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக விலங்குகள் நல வாரியத் தலைவர் எஸ்.பி.குப்தா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், “சட்ட மீறல் உறுதியானால் வாரியம் அவர்கள் மீது புகார் அளித்து மாநில அரசை நடவடிக்கை எடுக்கக் கூறும். 1960ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், பிரிவு 26இன்படி குற்றவாளிக்கு அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத் தண்டனை அல்லது இவை இரண்டும் வழங்கப்படும்” என்று கூறினார்.

2டி என்டர்டெய்ன்மென்ட் மேலாளர் ராஜா கூறும்போது, “புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்ததன் பேரில் தமிழ்நாடு ரேக்ளா பந்தயக் கூட்டமைப்புத் தலைவர் இந்தப் பந்தயத்தை நடத்தினார். 140 ரேக்ளா வண்டிகள் கலந்துகொண்டன. இந்தப் பந்தயத்தை எங்களது படப்பிடிப்புக்காக பயன்படுத்திக்கொண்டோம். ரேக்ளா பந்தயத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக விலங்குகள் நல வாரியம் கூறுவதில் உண்மை இல்லை” என்று கூறியுள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 1 பிப் 2018