மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள் பறிமுதல்!

விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் பேரீச்சம்பழத்துக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைச் சுங்கத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியாவைச் சேர்ந்த ரபி சையத் (வயது 43) என்பவரின் உடைமைகளைச் சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் வைத்திருந்த இரண்டு பைகளையும் சோதனை செய்தபோது, பை முழுவதும் பேரீச்சம்பழம் இருந்தது. வெளிநாட்டிலிருந்து வருபவர் இவ்வளவு பேரீச்சம்பழம் எதற்காக எடுத்து வந்தார் என்று சந்தேகத்தின்பேரில் பையில் இருந்த பேரீச்சம்பழத்தை கொட்டி சோதனை மேற்கொண்டார்கள். பேரீச்சம்பழத்தின் உள்ளே சிறு சிறு பாக்கெட்டுகளில் தங்க பிஸ்கெட்டுகள் இருந்தது. அவற்றைச் சேகரித்து பார்த்ததில் தலா 100 கிராம் எடை கொண்ட 37 தங்கக் கட்டிகள் மற்றும் 50 கிராம் எடை கொண்ட 2 தங்கக் கட்டிகள் என மொத்தம் 3.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 16 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கம் கடத்திய ரபி சையத்தை கைது செய்தனர்.

இதேபோன்று கடந்த 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூரிலிருந்து வந்த ஜீனத் இப்ராஹிம் என்பவரைச் சோதனை செய்தபோது, அவரது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 24 காரட் தங்க செயினும், 4 தங்க வளையல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தங்கத்தின் மதிப்பு 7.6 லட்சம் ரூபாயாகும்.

இதைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 31) திருச்சி விமான நிலையத்தில் டிபன் பாக்ஸ் ஏற்றுமதிபோல் காண்பித்து மலேசியாவுக்குப் போதைப் பொருளைக் கடத்த முயன்ற இளைஞரைப் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். அவர் வைத்திருந்த டிபன் பாக்ஸ்களிலிருந்து மொத்தம் 11.3 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

சென்னை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து தற்போது நூதன முறையில் கடத்தி கொண்டுவரப்படும், தங்கக் கட்டிகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவை தொடர்ந்து கைப்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018