மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

கூகுள் டூடுலில் பெண் எழுத்தாளர்!

கூகுள் டூடுலில் பெண் எழுத்தாளர்!

ஆங்கிலத்தில் `மை ஸ்டோரி', மலையாளத்தில் `என் கதா' என்ற தலைப்பில் கேரள எழுத்தாளர் கமலா தாஸ் எழுதிய சுயசரிதை உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 1) கூகுள் டூடுலில் அவரது புகைப்படத்தை வெளியிட்டுக் கொண்டாடுகிறது.

1934 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று கேரளாவில் வி.எம். நாயர்-பாலாமணியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் கமலா தாஸ். இவரது தந்தை ‘மாத்ருபூமி’ நாளிதழின் இயக்குநர் . கமலாவின் 15 வயதில் மோகன் தாஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மலையாள இலக்கிய கலை உலகில் மாதவிக்குட்டி என்ற பெயரிலும், ஆங்கில உலகில் கமலா தாஸ் என்ற பெயரிலும் அறியப்பட்ட இவர், ரசிகர்களால் `ஆமி' என்று அழைக்கப்பட்டார்.

மலையாள நாடு என்ற வார இதழில் தன்னுடைய சுயசரிதையை ‘என்டே கத’ என்ற பெயரில் தொடராக எழுதத் தொடங்கினார் கமலா. பிறகு அது மலையாளத்தில் ‘என்டே கத’ என்ற பெயரில் 1976ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது. பின்னர் ‘மை ஸ்டோரி’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் ‘தி கரண்ட்’ வார இதழில் தொடராக எழுதியது 1977ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது.

இவருடைய சுயசரிதை மிக கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க காரணம், பெண்கள் மீது புகுத்தப்படுகின்ற கலாச்சாரம், மரபு, ஒழுக்க நெறி போன்றவற்றை பற்றிய நிதர்சனமான உண்மைகளைப் பதிவு செய்ததே. இவருடைய மலையாள சுயசரிதையை விட ஆங்கில சுயசரிதை மிக கடுமையான எதிர்ப்பினை சந்தித்தது. இவருடைய என் கதை சுயசரிதையை மலையாளத்திலிருந்து தமிழில் நிர்மால்யா மொழி பெயர்த்திருக்கிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 1 பிப் 2018