மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

சமபலம் கொண்ட இரு அணிகள்!

சமபலம் கொண்ட இரு அணிகள்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று (பிப்ரவரி 1) நடைபெறும் ஆட்டத்தில் ஜம்ஷெத்பூர் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 4ஆவது சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. 8 அணிகள் மட்டும் விளையாடிவந்த இந்த தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 10 அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெற்றுவருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட ஜம்ஷெத்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு புதிய அணிகளும் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிப் புள்ளிகளைச் சேர்த்துவருகின்றன.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சீசன் தொடங்கியபோது தடுமாறிய ஜம்ஷெத்பூர் அணி தற்போது தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேறி வருகிறது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடி உள்ள ஜம்ஷெத்பூர் அணி, 5 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் சமன் செய்ததால் 19 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜம்ஷெத்பூர் அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது. மும்பை அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் இதற்கு முன்னரே மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து போட்டி சமனில் முடிந்தது. இருப்பினும் சமீபத்திய போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவரும் ஜம்ஷெத்பூர் அணி, மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. எனவே இன்றைய போட்டி சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018