மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

இன்று பட்ஜெட்: எதிர்பார்ப்பில் இந்தியா!

இன்று பட்ஜெட்: எதிர்பார்ப்பில் இந்தியா!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்த 29ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதன்பின், இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அடுத்த ஆண்டு மே மாதம் பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைவதால், அப்போது இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே நிதியமைச்சரால் தாக்கல் செய்ய முடியும். எனவே, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு, இதுவே கடைசி பட்ஜெட் ஆகும். இதனால், இந்த பட்ஜெட்டில் பொதுமக்களைக் கவரும் பல அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த பட்ஜெட்டில் நிறைய சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக, விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், சிறு மற்றும் குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில மணி நேரங்களில், இந்த அனுமானங்களில் எவையெல்லாம் உயிர் பெறும் எனத் தெரிந்துவிடும்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி இம்மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இடைப்பட்ட காலத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெறும். அதோடு, முத்தலாக் உள்ளிட்ட மசோதாக்களும் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 1 பிப் 2018