மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

எடப்பாடி வந்தாலும் தண்ணீர் இல்லை: கர்நாடகா!

எடப்பாடி வந்தாலும் தண்ணீர் இல்லை:  கர்நாடகா!

‘காவிரியிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுவது என்பது இயலாத காரியம்’ என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் விசாரணையை முடித்து, நான்கு வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 9ஆம் தேதி அறிவித்தது.

ஆனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ள காரணத்தால், டெல்டா மாவட்டப் பாசனத்துக்குப் போதிய தண்ணீர் தர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்ட சம்பா பயிர்களைக் காக்கும் நோக்கில் கர்நாடக முதல்வரைச் சந்திப்பதற்குத் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டுத் தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இதுதொடர்பாக நேற்று பெங்களூருவில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘கர்நாடக பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதால் காவிரி பிரச்னையில் தமிழக முதல்வர் பழனிசாமியைச் சந்திப்பது குறித்து ஒருவாரத்துக்குப் பிறகு முடிவு செய்யப்படும்’ என்று கூறியிருந்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 1 பிப் 2018