மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

கருணாநிதிக்குப் பல் சிகிச்சை!

கருணாநிதிக்குப் பல் சிகிச்சை!

திமுக தலைவர் கருணாநிதி நேற்று (ஜனவரி 31) பல் தொடர்பான சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்தபின், அவர் உடனடியாக வீடு திரும்பினார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதுமை தொடர்பான உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் வீடு திரும்பினார். ஆனாலும், முன்னர் இருந்ததைப் போல அவரால் கட்சிப்பணி ஆற்ற இயலவில்லை.

சமீபத்தில், முரசொலி பவள விழாவின்போது நடந்த புகைப்படக் காட்சியைப் பார்த்து ரசித்தார். 2ஜி தீர்ப்பு வெளியானபோது, தன் மகள் கனிமொழி தன்னை சந்தித்து தகவலைச் சொன்னபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 31) சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென்று கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அரைமணி நேரத்தில் சிகிச்சை முடிந்து, அவர் வீடு திரும்பினார். கோபாலபுரம் வட்டாரத்தில் விசாரித்தபோது, “கருணாநிதி 90 வயதினைக் கடந்துவிட்டாலும் அவரது பற்கள் உறுதியாக இருக்கின்றன. முதுமையின் காரணமாக தினமும் பிரஷ் செய்ய இயலாது என்பதால் மருத்துவ ரீதியாக பற்களை க்ளீனிங் செய்யும் பொருட்டு அவர் மருத்துவமனைக்குச் சென்று வந்தார்” என்று தெரிவித்தனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018