உறுதியாகாத 2.0 ரிலீஸ்: போட்டி போடும் படங்கள்!

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகாத நிலையில், கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘சந்திரமௌலி’ படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜனவரி 26லிருந்து ஏப்ரல் 27ஆம் தேதிக்குத் தள்ளிப்போன 2.0 ரிலீஸ் அன்றும் உறுதியாக வெளியாகுமா என்றால் அதற்கான விடை படக்குழுவுக்கே இன்னும் தெரியவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் பிலிம்ஸ் சர்க்கிள், லைக்கா புரொடக்ஷனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஏப்ரல் 27ஆம் தேதி படத்தை வெளியிட எங்களால் முடிந்த அளவு பணியாற்றி வருகிறோம். டீசரையும் ஒரு பாடலையும் பிப்ரவரி மாதம் வெளியிடவுள்ளோம். மார்ச் மாதம் ட்ரெய்லர் வெளியாகும்” என்று கூறியுள்ளனர்.