மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

தனிநபர் வெற்றியல்ல: அனுஷ்கா

தனிநபர் வெற்றியல்ல: அனுஷ்கா

‘பாகமதி படத்தின் வெற்றி தனிநபரின் வெற்றியல்ல; படக்குழுவினரின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி’ என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பாகமதி’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் தெலுங்கில் பெரும் வசூலைக் குவித்திருக்கிறது. இதற்குக் காரணமான ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக ஆந்திராவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அனுஷ்கா, இசையமைப்பாளர் தமன், இயக்குநர் ஜி.அசோக், தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் புரொமோத் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அனுஷ்கா, “நல்ல சிந்தனையால், நல்ல திரைக்கதை அமைப்பால், படக்குழுவினரின் கடுமையான உழைப்பால் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. இது தனிநபர் வெற்றியல்ல; படக்குழுவினைச் சேர்ந்த அனைவரின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி” என்று கூறினார்.

படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும்விதமாக பேசிய அனுஷ்கா, “இந்த பாகமதி படத்தை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முக்கியமாகப் படத்தின் இயக்குநர் அசோக் சாருக்கும், என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நினைவில் நிற்கும்படியான ஒரு படத்தை தருவதற்காக நான்கு வருடங்களாகக் கடினமாக உழைத்து அர்ப்பணிப்பு செய்த யு.வி.கிரியேஷன்ஸ் படக்குழுவினருக்கும் என் தனிப்பட்ட நன்றிகள். என் மீது அன்புகொண்டு இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்த ரசிகர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி” எனப் பேசினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 1 பிப் 2018