மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

மோகன்லாலுக்கு வயது ஒரு தடையா?

மோகன்லாலுக்கு வயது ஒரு தடையா?

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது ரசிகர்களை மகிழ்விக்கத் தவறுவதே இல்லை மோகன்லால். ஒடியன் படத்துக்காக மிகவும் இளமையாக நடிப்பதற்காக, அதிக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, கட்டுடலுடனும், ஸ்மார்ட்டாகவும் ரசிகர்கள் மத்தியில் வந்து அனைவரையும் மூச்சடைக்க வைத்தார். இப்போதும் அதேபோல ஒரு செயலை செய்திருக்கிறார்.

கேரளாவின் கன்னூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் வாலிபால் லீக் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில், 122ஆவது பட்டாலியன் அணியும், கன்னூர் பத்திரிகையாளர்கள் சங்க அணியும் மோதிக்கொண்டன. இதில், பட்டாலியன் அணியில் இடம்பெற்று ஆட்டத்தைத் தொடங்கிவைத்தார் மோகன்லால். 57 வயதிலும் அங்குமிங்கும் ஓடி ஆடிய மோகன்லாலைக் கண்ட ரசிகர்கள் ஆர்ப்பரித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

2009ஆம் வருடம், மோகன்லாலின் திரைத்துறை சேவையைப் பாராட்டி அவருக்கு கன்னூர் பகுதியிலுள்ள 122ஆவது படைப்பிரிவின் லெப்டினண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகிலிருந்து கன்னூர் பத்திரிகையாளர்கள் சார்பில் நடத்தப்படும் வாலிபால் லீக் போட்டியில் ஒவ்வொரு வருடமும், 122ஆவது படைப்பிரிவின் வாலிபால் அணியில் கலந்துகொண்டு மோகன்லால் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018