மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

அடேய்ய்ய்ய்... போதும்டா... சந்திர கிரகணம் முடிஞ்சி போச்சு!

நான் நிலாவை பார்த்துருக்கேன். என் கண்ணுக்கும் தெரிஞ்சது.

இதுபோல கிரகணம்லாம்கூட போட்டோவுல. வீடியோவுலல்லாம் பார்த்துருக்கேன்.

எங்க வீட்லயும் டிவி இருக்குங்குற மாதிரி, எனக்கும் கண்ணு இருக்கு, நானும் இந்த நாட்டுலதான் இருக்கேன்ய்யா.

ஏன்யா இப்படி சந்திர கிரகணம் போட்டோ போட்டுச் சாவடிக்கிறீங்க?

ஒருத்தவன் குடும்பத்தோட செஃல்பி எடுத்துப் போடாறான்.

அதுல ஒரு பொண்ணு போட்ட போட்டோவுக்கு, “அடடே ரெண்டு சந்திரன்”னு கமெண்ட் வழிதல் வேற.

மொட்ட மாடில நிக்குது அத்தனை குடும்பமும்.

குழந்தைகளுக்கு ஸ்பெஷல் க்ளாஸ்லாம் லீவு விட்டுட்டாங்களாம்.

இல்லத்தரசிகள் சீரியலுக்கெல்லாம் லீவு விட்டுட்டு வானத்தைப் பாக்குறாங்க.

பாதி பேர் மொட்ட மாடியில நின்னுகிட்டு.. “நேத்து காயத்ரி ஆஸ்பத்திரில இருந்து டிஸ்சார்ஜ் ஆனாளே, இன்னிக்கு அதையே சாக்கா வெச்சு மாமியார்கிட்ட சண்டை போட்டு, தனிக்குடித்தனம்தான் போயிருப்பா... நீ வேணும்னா பாரு.”

“அட, நீங்கவேற... அதெல்லாம் வேடிக்கைப் பார்த்துட்டு கார்த்தி சும்மா இருப்பானா?”

அப்படின்னு திரைக்கதை ஓடுது.

இன்னொரு குடும்பத்தோட குரல்...

“ ஏங்க.. கொஞ்சம் சவுண்ட் வெச்சிட்டு நீங்களும் மேல வாங்க. இங்க இருந்தே கேட்டுக்கிறேன்.”

உஸ்ஸ்ஸ்... முடியல!

இதுல காதல் மன்னர்களையெல்லாம் கேட்கவே வேணாம்.

என்னமோ நிலவு கவிதையே இதுவரைக்கும் எழுதாத மாதிரியும், காதலியை நிலவோட ஒப்பிடாத மாதிரியும், புதுசா இப்பதான் தோணுன மாதிரியும்...

முடியல சாமி..!

இதுல போன் பண்ணில்லாம் கேக்குறாங்க.

“என்ன, பார்த்தீங்களா?”

“என்ன, என்ன பார்த்தீங்களா?”

“இல்ல.. ப்ளூ மூன் பார்த்தீங்களான்னு கேட்டேன்.”

“ப்ளூ மூனா, ரெட் மூன் அப்படின்னுதானே சொன்னாங்க.”

“அதான் ப்ளூ மூன் வித் ரெட் மூன்.”

“ஓ... பார்த்தேன். அவ்ளோதானே வேற ஒண்ணும் இல்லியே.”

“150 வருஷத்துக்கு ஒருதடவைனு சொல்றாங்களே உண்மையா?”

“முந்தா நாள் பிரதோஷம்கூடதான் அப்படி சொன்னாங்க.”

“ஆமா... ஆமா... உங்களுக்கும் அந்த மெசேஜ் வந்துச்சா வாட்சப்ல... எனக்கு ஏன் அனுப்பல நீங்க?”

“அய்ய்யோ... எனக்கு அனுப்பினதே நீங்கதான்.”

“ஓ... சரி சரி.”

“ஓகே.. போனை வைக்கட்டுமா...”

“ஏன்... எனக்கு ஃப்ரீ கால்தான்... நீங்க பேசுங்க.”

(Call cut & BLOCKED)

படுத்துறாங்கய்யா படுத்துறாங்க...

அடுத்த கொடுமை என்னன்னா.. இதே வடிவத்துல அப்பறம் வாட்சப் சாட்லயும் தனித்தனியா வந்து கேக்குறாங்க.

ஒரு சந்திர கிரகணம் வந்தது குத்தமா?

இதுல போன ஸ்விட்ச் ஆஃப் பண்ணுங்கன்னு ஒரு குரூபு... அதுக்கு தர்ப்பை புல் போட்டு வைங்கன்னு.

அடேய்ய்ய்ய்.. உங்க அட்ராசிட்டிக்கு ஓர் அளவில்லையா...

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 1 பிப் 2018