மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

பியூட்டி ப்ரியா: சிலிம்மான இடுப்புக்கு..

பியூட்டி ப்ரியா: சிலிம்மான இடுப்புக்கு..

இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை சிலருக்கு இருக்கும். அவர்கள், ஸ்டாண்டிங் லெக் ரொட்டேஷன் பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில் நேராக நின்றுகொண்டு கைகளைப் பின்னால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மட்டும் முன்பக்கமாக சற்று மேலே உயர்த்தி மெதுவாக வட்டமாகச் சுழற்றி பழைய நிலைக்கு வர வேண்டும்.

இதேபோல் இடது காலுக்கு செய்ய வேண்டும். இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்தப் பயிற்சி செய்யும்போது இடுப்புப் பகுதியில் வலி இருக்கும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். ஆரம்பத்தில் நேராக நின்று இந்தப் பயிற்சி செய்ய முடியாதவர்கள் சுவரைப் பிடித்துக் கொண்டு செய்யலாம்.

உங்களது நார்மலான எடையைக் கண்டுபிடிக்க சிறிய கணக்கு இருக்கிறது. உங்கள் உயரத்தை அளவிடுங்கள். அதிலிருந்து 100 செ.மீட்டரை கழித்தால் அதுதான் நார்மலான எடை. உதாரணமாக உயரம் 150 செ.மீட்டர் உயரம் இருப்பவரின் நார்மல் எடை 50 கிலோ. இதற்கு மேல் பருமனாக இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இதேபோல் உயரத்துக்குத் தகுந்த இடுப்பு அளவையும் வைத்து கொள்ள வேண்டும். தற்போது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அதிகபட்ச கொழுப்பை கண்டறிந்து அதைச் சரிசெய்து கொள்ள பிசியோதெரபி முறையில் வாய்ப்புகள் உள்ளன. கொழுப்பின் அளவைக் கண்டறியும் மெஷின் உள்ளது. உடலில் கை, மார்பு, வயிறு, இடுப்பு, தொடை மற்றும் கால் என எந்தப் பகுதியில் அதிக கொழுப்பு உள்ளது என்பதையும் கண்டறியலாம்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 1 பிப் 2018