மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

இந்தியா - பாகிஸ்தான்: ரயில் போக்குவரத்து!

இந்தியா - பாகிஸ்தான்: ரயில் போக்குவரத்து!

மூன்றாண்டுகளுக்கு இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து சேவை நடைபெற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

காஷ்மீரின் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்தத் தாக்குதலால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் பதற்றமாகவே காணப்படும்.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து ரயில் போக்குவரத்து நடைபெற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவின் முனாயயோவில் இருந்து பாகிஸ்தான் கோக்ராபருக்கு ரயில் போக்குவரத்து சேவை நடைபெறுகிறது. இதன்மூலம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தென் பகுதியும், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் இடையேயும் ரெயில் இயக்கப்படும்.

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக இந்தப் பகுதிகளில் ரயில் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் மூன்றாண்டுகளுக்கு நீடித்து ரயில் போக்குவரத்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 1 பிப் 2018