மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

பாலா படத்தில் ராஜுமுருகன்

பாலா படத்தில் ராஜுமுருகன்

பாலா இயக்கவுள்ள ‘வர்மா’ படத்துக்கு இயக்குநர் ராஜுமுருகன் வசனம் எழுதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. விஜய் தேவர்கொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார். ஷாலினி பாண்டே அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தை பாலா, வர்மா என்ற தலைப்பில் ரீமேக் செய்கிறார். விக்ரமின் மகன் த்ருவ் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜுமுருகன் வசனம் எழுதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜுமுருகன் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். இவர் எழுதிய ‘வட்டியும் முதலும்’ தொடர் அதே பெயரில் புத்தகமாகவும் வெளிவந்து வாசகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஜோக்கர் படத்தில் கதைக்கு நிகராக வசனமும் பெரியளவில் பேசப்பட்டது. தனது படங்களுக்கு மட்டுமல்லாமல் பிற படங்களுக்கும் வசனம் எழுதும் ராஜுமுருகன், கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்துக்கும் வசனம் எழுதியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 1 பிப் 2018