மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 பிப் 2018

ஸ்வாச் பாரத்தின் ஹீரோவான ஆட்டோ ஓட்டுநர்!

ஸ்வாச் பாரத்தின் ஹீரோவான ஆட்டோ ஓட்டுநர்!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த தீபக் தாப் என்ற ஆட்டோ ஓட்டுநர், அந்நகரத்தின் 2018ஆம் ஆண்டுக்கான தூய்மை சுற்றாய்வுத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாண்டுகளுக்கு முன் தீபக் தாப் தான் பணியாற்றிய வேலையிலிருந்து நீக்கப்பட்டதால், ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றத் தொடங்கினார். இவரின் ஆட்டோவில் பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகள்தான் பயணம் செய்வார்கள். அப்போது, குழந்தைகள் சாப்பிடும் பொருள்களின் கவர்களைச் சாலைகளில் போடுவதைப் பார்த்துள்ளார்.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என நினைத்து தீபக், தனது ஆட்டோவிலேயே சிறிய குப்பைத் தொட்டியை வைத்து, அதில் குப்பைகளைப் போடும்படி தனது பயணிகளிடம் அறிவுரை கூறியுள்ளார். ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கையைக் கண்டு எள்ளி நகையாடிய நண்பர்களும், அவரின் மனைவியும் அந்த முயற்சி வெற்றியடையவே அவரைப் பாராட்டத் தொடங்கியுள்ளனர்.

ஜெய்ப்பூர் மாநகர மேயர் அசோக் லஹோட்டியைச் சந்தித்து, தீபக் தனது முயற்சியை அவரிடம் கூறியுள்ளார். அவரின் முயற்சியைப் பாராட்டும் விதமாக, தூய்மை சுற்றாய்வு 2018ஆம் ஆண்டின் ஜெய்ப்பூர் நகரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணுவ வீரர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கிவருகிறார். ராணுவ வீரர்களும், துப்புரவுத் தொழிலாளர்களும் தேசிய கடமையைச் செய்வதாக அவர் நம்புகிறார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 1 பிப் 2018