மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சாய்னா, சிந்துவைக் குறிவைக்கும் இந்தியன் ஓப்பன்!

சாய்னா, சிந்துவைக் குறிவைக்கும் இந்தியன் ஓப்பன்!

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடர் இன்று (ஜனவரி 31) நியூ டெல்லியில் உள்ள ஶ்ரீஃபோர்ட் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளேக்ஸில் தொடங்குகிறது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் மீது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. ஏனெனில் இருவரும் சமீபத்தில் நடைபெற்ற இந்தோனேசியா ஓப்பன் தொடரில் மோதிய போட்டி சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாக அமைந்தது. இந்தியன் ஓப்பன் தொடரில் நடிப்பு சாம்பியனான பி.வி.சிந்துவும், சமீபத்தில் நடைபெற்ற இந்தோனேசியா தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா இருவரும் இந்த தொடரில் மீண்டும் மோதுவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சாய்னா நேவால் ரியோ ஒலிம்பிக் தொடருக்குப் பின்னர் தொடர்ச்சியாகக் காயத்தினாலும், உடல் தகுதி இன்மையாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே, பெரும்பாலான தொடர்களில் இரண்டாம் சுற்றிலேயே வெளியேறினார். ஆனால், தற்போது நல்ல உடல்நிலையுடன் உள்ள அவர், இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘போட்டியைப் பற்றி கவலை இல்லை, உடல்நிலை குறித்துதான் சிந்தனையாக உள்ளது’ என சாய்னா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் சாய்னா டென்மார்க்கின் சோஃப்பி டால் உடன் மோத உள்ளார். பி.வி.சிந்து டென்மார்க்கின் நட்டாலியா உடன் பல பரீட்சை நடத்த உள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 31 ஜன 2018