மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

போட்டோஷாப் அறிவிப்பு: திமுக விளக்கம்!

போட்டோஷாப் அறிவிப்பு: திமுக விளக்கம்!

முரசொலியில் ஸ்டாலினின் பெயரைக் குறிப்பிடக் கூடாது எனவும் செயல் தலைவர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் வெளியான தகவல் தொடர்பாக திமுக விளக்கமளித்துள்ளது.

திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழாக முரசொலி இருந்துவருகிறது. இதில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் பெயர் ‘கலைஞர்’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பெயர் ‘கழக செயல் தலைவர் ஸ்டாலின்’ என்றே குறிப்பிடப்பட்டுவருகிறது. இந்நிலையில், முரசொலியில் அனைத்துச் செய்திகளிலும் ஜனவரி 31 முதல் ஸ்டாலினின் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்றும் கழக செயல் தலைவர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் முரசொலியில் விளம்பரம் வெளியானதாக போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தளத்தில் பரப்பப்பட்டது. உண்மையை அறியாத பலரும். சமூக வலைத்தளத்தில்இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கினர்.

இந்நிலையில், இந்த அறிவிப்பு போலியானது என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018