மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

அதிகாரிகள், சிலருக்கு மட்டுமே சாதகமாக உள்ளனர்!

அதிகாரிகள், சிலருக்கு மட்டுமே சாதகமாக உள்ளனர்!

மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் தொடர்பான அவமதிப்பு வழக்கில் ஒருசில அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்ட எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்யவும், கரூர் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜனை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமனம் செய்யவும் மாநில சுகாதாரத் துறை செயலாளர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, ரேவதி கயிலைராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜனவரி 31) நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பு வந்தது. அப்போது, 36 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ரேவதி கயிலைராஜனுக்கு மருத்துவக் கல்வி இயக்குனர் தகுதி உள்ளதா, இல்லையா; அவரைவிட அனுபவம் குறைந்தவர்களுக்குப் பணி வழங்கப்பட்டதற்குக் காரணம் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 31 ஜன 2018