மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

பாலியல் தொல்லையில் அமலாபால்: தொழிலதிபர் கைது!

பாலியல் தொல்லையில் அமலாபால்: தொழிலதிபர் கைது!

சென்னையிலுள்ள நடன வகுப்பில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை அமலா பால், சென்னை தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பாண்டிச்சேரி முகவரியில் சொகுசு கார் வாங்கியதற்காகவும், அதில் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து வரி ஏய்ப்பு செய்ததற்காகவும் சமீப நாட்களாக கேரள காவல்துறையில் ஆஜராகிவந்த நடிகை அமலா பால், இன்று(31.01.2017) சென்னையிலுள்ள சென்னை தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு பதிவு செய்த புகாரில், சென்னையிலுள்ள நடனப் பள்ளி ஒன்றில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் ‘Dazzling Tamizhachi’ எனும் பெண்களுக்கான நிகழ்ச்சியில், தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பல நடிகைகள் கலந்துகொள்கின்றனர். இதில் நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் அமலா பால் ஒரு பாடலுக்கு நடனமாடுவதாக ஒப்புக்கொண்டிருந்தார். அதற்காக கடந்த ஒரு வாரமாக சென்னையில் தங்கி, அவரது தனிப்பட்ட நடன இயக்குநருடன் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அமலா கொடுத்திருக்கும் இந்த புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 31 ஜன 2018