மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சமந்தா அரசியல் என்ட்ரி?

சமந்தா அரசியல் என்ட்ரி?

சமந்தாவின் அரசியல் நுழைவு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரஜினி, கமல், விஷால், உதயநிதி என நடிகர்கள் ஒவ்வொருவராக அரசியல் களம் காணத் தொடங்கிவிட்ட நிலையில் மேலும் சில நட்சத்திரங்களின் ரசியல் பிரவேசம் குறித்து வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன. வதந்தி பரப்புவோர் தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவரான சமந்தாவைக் குறிவைத்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தெலங்கானாவிலுள்ள செகந்திராபாத் தொகுதியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியானது. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தொகுதி என்பதால் சமந்தாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகக் கருத்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தெலங்கானா மாநிலத்தின் கைத்தறி நெசவுத் துறைத் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டதற்கான காரணமாக அவரது அரசியல் நுழைவையே சுட்டிக்காட்டினர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 31 ஜன 2018