கிச்சன் கீர்த்தனா: தாளித்த வெங்காயக் குழம்பு!


தேவையானவை:
சின்ன வெங்காயம் - 25 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நீளமாக நறுக்கியது
வெள்ளைப்பூண்டு - 10 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
புளி - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
(அனைத்தையும் நைசாக அரைக்கவும்)
தாளித்துக் கொள்ள:
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தனியாதூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். கறிவேப்பிலை சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், நான்காக நறுக்கிய தக்காளியை வதக்கவும். நைசாக அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், தனியாதூள் சேர்க்கவும். நீர்க்க தண்ணீர்விட்டு உப்பு சேர்த்து, எண்ணெய் தெளிந்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இந்தக் குழம்பு தயாரானதும் வெங்காய வடகக் குழம்பாகவும் செய்யலாம்.
வெங்காய வடகக் குழம்பு
வெங்காயம் தாளித்துவிட்ட குழம்பில், வெங்காய வடகம் பொரித்துப்போட்டு, இரண்டு நிமிடங்கள் சுடவைத்து இறக்கினால் வெங்காய வடகக் குழம்பு தயார்!
கீர்த்தனா ஜோக்ஸ்:
அப்பா: ஏன்டா டிரம்ம உருட்டுற?
மகன்: தம்பிக்கு விளையாட்டுக் காட்டறேன்பா!
அப்பா: தம்பி எங்கடா?