மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

உலகம் சுற்றும் ஜல்லிக்கட்டு!

உலகம் சுற்றும் ஜல்லிக்கட்டு!

தமிழகம் மட்டுமில்லாமல், தமிழர்கள் பரந்துவிரிந்து வாழும் உலகின் அத்தனை இடங்களிலும் தீயாய் பற்றிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முதலாம் ஆண்டு தினத்தைக் கொண்டாடும் விதத்தில், ‘ஜல்லிக்கட்டு 2017- ஜன 5 முதல் 23 வரை’ திரைப்படத்தின் பாடல்களை வெளியிட முடிவெடுத்திருக்கிறது படக்குழு.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சாட்சியாக நிற்கும் ஒவ்வொருவருக்குப் பின்னரும் ஒவ்வொரு கதை இருந்தது. அதுபோலவே, உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கியவர்களுக்கும் ஒரு கதை உண்டு. அப்படி அமெரிக்கா, பிரான்ஸு உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய ஐந்து நபர்களின் கதையை, பயணத்தை தொகுத்து சுவாரசியமான பதிவாக உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு 2017- ஜன 5 முதல் 23 வரை’.

இத்திரைப்படத்தில் சொல்லப்படும் கதை போன்றே, அது நடைபெறும் இடத்துக்கான பாரம்பரியத்தின் வாசனை மாறாமல் பாடல்களுக்கான களத்தையும் உருவாக்கி, அப்பாடல்களை அந்தந்த இடங்களிலேயே வெளியிடவும் முடிவெடுத்திருக்கின்றனர். தமிழர் நாகரிகத்தை ஸ்பாட்லைட் போட்டு வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கும் கீழடியிலிருந்தே இந்த நிகழ்வைத் தொடங்குகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018