மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

பொன்னார் பேசியதில் என்ன தவறு?: தமிழிசை

பொன்னார் பேசியதில் என்ன தவறு?: தமிழிசை

சென்னையில் இன்று (ஜனவரி 31) பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தான் பாஜகவை விட்டு விலகுவதாக வெளியான தகவல்கள் அவதூறானவை என்று கூறினார். “எனது உயிர் போகும் வரை பாஜகவை விட்டு விலகுவதாக இல்லை. தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதற்கு, பாஜக பலம்பெற்றுவிடக் கூடாது என்ற சூழ்ச்சியே காரணம்” என்று தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக பாஜக குறித்தும், சமீபத்திய பிரச்சினைகள் குறித்தும், உள்ளாட்சித் தேர்தலுக்குத் தங்கள் கட்சியினர் தயாராக இருப்பது குறித்தும் பேசினார். தமிழக பாஜக தலைவர்களிடையே கருத்து மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், மாநில தலைமைப் பதவியிலிருந்து தமிழிசை விலகுகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதுபற்றிய கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை, தமிழக பாஜக தலைவர்களிடையே எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.

“எனது உயிர் போகும்வரை பாஜகவை விட்டு விலகுவதாக இல்லை. தமிழிசையிடம் இருந்து எந்த விதத்திலும் பாஜகவைப் பிரிக்க முடியாது. எனது வாழ்க்கையின் குறிக்கோளே, தமிழகத்தில் தாமரையை அரியணை ஏற்றுவதுதான்” என்றார்.

சமீபத்தில், நானும் திராவிடன்தான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதுபற்றிய கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை, “அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? இதனைச் சொல்ல வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது” என்றார். “என்னைப் பொறுத்தவரை திராவிடத்துக்குள்தான் நாங்கள் இருக்கிறோம். இரண்டுக்கும் எந்த மாறுபாடும் இல்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். தமிழகத்தைப் பற்றியும், திராவிடத்தைப் பற்றியும் தேசிய கட்சிகளில் இருப்பவர்களுக்கு அக்கறை இல்லாதது போல ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்க திராவிடக் கட்சிகள் முயற்சிக்கின்றன. திராவிடக் கட்சித் தலைவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால், நாங்கள் எந்த விதத்திலும் குறைவானவர்கள் அல்ல. அவர்களைவிட, எங்களால் உடனடியாக நல்ல திட்டங்களைத் தமிழகத்துக்குக் கொண்டுவர முடியும். ஏனென்றால், மத்தியில் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்” என்றார் தமிழிசை.

தேசிய உணர்வோடு கூடிய மாநில அக்கறை, மாநில உணர்வோடு கூடிய தேசிய அக்கறை இருந்தால் மட்டுமே ஒரு நேர்மறையான அரசியலைத் தமிழகத்திற்குக் கொண்டுவர் முடியும்” என்றார் முத்தாய்ப்பாக.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 31 ஜன 2018