மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சூடு பிடிக்கும் விஜய் சேதுபதி பட பிசினஸ்!

சூடு பிடிக்கும் விஜய் சேதுபதி பட பிசினஸ்!

விஜய் சேதுபதி மாறுபட்ட பல தோற்றங்களில் நடித்திருக்கும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது.

ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடி இனத்தவர் உட்பட பல விதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. சாகச நகைச்சுவைத் திரைப்படமான இதனை அம்மே நாராயணா புரொடக்‌ஷன்ஸ் , 7சி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. சென்னை சிட்டி பகுதியை ஜாஸ் சினிமாஸும், செங்கல்பட்டு, வட சென்னை, தென் சென்னைப் பகுதிகளை மதுமதி பிலிம்ஸும், சேலம் பகுதியைக் கனகராஜும், திருநெல்வேலி-கன்னியாகுமரி பகுதிகளை ஏஎஸ்கே சினிமாஸும், கோயம்புத்தூர் பகுதியை வேல் சினிமாஸும், மதுரைப் பகுதியை எஸ்ஆர்எஸ் மூவிஸும் கைப்பற்றியிருக்கின்றன.

தமிழகத்தில் 400 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகும் இந்த படம் உலக நாடுகளிலும் வெளியாகிறது. அமெரிக்காவில் மட்டும் 47 தியேட்டர்களில் வெளியாகிறது. சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் வெளிவருகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 31 ஜன 2018