வைஃபை சேவை விரைவில் தொடக்கம்!

தமிழகத்தின் 93 பகுதிகளில் மார்ச் மாத இறுதிக்குள் 4ஜி வைஃபை ஹாட் ஸ்பாட் சேவை தொடங்கப்படும் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுத்துறை தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தமிழகத்தில் 4ஜி வைஃபை சேவை தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் 93 பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 4ஜி சேவையை மார்ச் மாத இறுதிக்குள் தொடங்கவுள்ளது. 4ஜி சேவைக்கான ஆரம்பகட்டப் பணிகள் கடந்த ஆண்டின் ஜூன் மாதமே தொடங்கப்பட்டிருந்தது. சென்னையின் 43 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தின் 20 இடங்களிலும் ரூ.4 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டிருந்தன.