மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

மத்திய பட்ஜெட்: தமிழகத்தையும் கவனிக்க வேண்டும்!

மத்திய பட்ஜெட்: தமிழகத்தையும் கவனிக்க வேண்டும்!

மத்திய பட்ஜெட்டில் தமிழக நலனைக் கருத்தில்கொண்டு மாற்றாந்தாய் மனப்பான்மையின்றி மத்திய அரசு செயல்பட வேண்டும் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 750 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், தமிழக நலனைக் கருத்தில்கொண்டு மாற்றாந்தாய் மனப்பான்மையின்றி மத்திய அரசு செயல்பட வேண்டும். மாநிலத்தின் நலனை நாங்கள் ஒருகாலமும் விட்டுக்கொடுக்க மாட்டோம். மாநிலத்தின் நிதி தன்னாட்சியைப் பாதுகாக்கும் வகையில் முன்மொழிவுகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. நம்முடைய மாநிலத்திலிருந்து பெறப்படும் வரி மத்தியத் தொகுப்புக்குச் செல்வதுபோல், மத்தியத் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்குத் தேவையான நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுவருவது தொடர்பாக எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. அதே வேளையில், மீனவர்கள் இனி வருவதற்கு வாய்ப்பில்லை என அவர்களின் உறவினர்களும் அரசுக்குக் கடிதம் எழுதிவருகின்றனர். அவர்களின் மனு விவசாயத் துறை செயலர், கால்நடைத் துறை செயலர் போன்றோர் அடங்கிய குழுவுக்கு அனுப்பப்படும். அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்ற பின் ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 31 ஜன 2018