மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விரைவில்!


மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் தொடங்கி 4 நாட்கள் ஸ்பெயினில் நடைபெறவுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் தங்களது புதிய கருவிகளை பல்வேறு தொழில்நுட்ப நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்வதுண்டு. அதன்படி சமீபத்தில் CES என்ற நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்றது. அதில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் அவர்களது புதுமையான கருவிகளை அறிமுகம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2018 நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் அவர்களின் புதுமையான மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதில் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடல் S9 மற்றும் சோனி நிறுவனத்தின் XZ ப்ரோ, LG நிறுவனத்தின் G6 மற்றும் HTC நிறுவனத்தின் U12 ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.