மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

நியூட்ரினோவை எதிர்த்துக் களமிறங்கிய வைகோ

நியூட்ரினோவை எதிர்த்துக் களமிறங்கிய வைகோ

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேனியில் இன்று (ஜனவரி 31) தன் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதற்குப் பல்வேறு அமைப்புகளும் விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தின் சார்பாக வைகோ நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துப் பிரச்சார பயணம் மேற்கொள்ளவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வைகோ இன்று தன் பிரச்சாரப் பயணத்தைத் தேனி மாவட்டத்திலிருந்து துவங்கியுள்ளார். பயணத்தை துவக்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "நியூட்ரினோ ஆய்வகத்தினால் பெரும் அழிவு வர இருக்கிறது. இதனை எதிர்த்து எட்டு ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். டார்ஜிலிங்கில் அமையவிருந்த நியூட்ரினோ திட்டம் மக்கள் எதிர்ப்பின் காரணமாக பொட்டிபுரத்தில் அமையவுள்ளது. இந்த ஆய்வு மையத்துக்காக மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு 1950 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. திட்ட அறிவிப்பு வந்தபோதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். கேரளா முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து இந்த திட்டம் ஏற்படுத்தும் ஆபத்தை விளக்கினேன்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, "சுமார் 11 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்திப் பாறைகளைத் தகர்க்க உள்ளனர். இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும்.மேலும் தென் மாவட்ட விவசாயமே அழிய நேரிடும். எனவே, நியூட்ரினோ திட்டத்துக்குத் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக் கூடாது. இந்தத் திட்டத்தால் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 12 அணைகள் உடைபட வாய்ப்பிருக்கிறது" என்றும் வைகோ தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, மே 17 இயக்க தலைவர் திருமுருகன்காந்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் போன்றோர் உடனிருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018