மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

யாராவது என்னை திட்டுங்களேன்: அப்டேட் குமாரு

யாராவது என்னை திட்டுங்களேன்: அப்டேட் குமாரு

தமிழ்நாட்டுல இன்னைக்கு தேதிக்கு யாருலாம் அதிகமா திட்டு வாங்குறாங்களோ அவங்க தான் முரட்டு தனமா ஜெயிக்குறாங்க. இதுக்கு மெர்சல் பார்முலான்னு பேர் வச்சுருக்காங்க. ஆண்டாள் மேட்டர்ல வைரமுத்துவை திட்டுனாங்க. இப்ப புக் பேர்ல அவர் புக் 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆச்சுன்னு ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி கொடுத்துருக்காரு. இந்த பார்முலா அங்க சுத்தி இங்க சுத்தி இப்ப தமிழிசைக்கு வொர்க் அவுட் ஆயிருச்சு. மீம்ஸ் கிரியேட்டர்ஸ்லாம் அவரை கலாய்ச்சு தள்ளுன உடனே இப்ப இந்தியாவில் சிறந்த பெண் அரசியல்வாதி விருதை வாங்கியிருக்காரு. ரஜினியை வேற பல குரூப்கள் விமர்சிச்சு டிவிட் போடுறாங்க. அவரும் ஆமோகமா ஜெயிக்க போறாரு. அதனால மக்களே இந்த குமாரையும் நாலு வார்த்தையில நறுக்குன்னு திட்டுங்க, ஒரு ரெண்டு மீம்ஸ் போடுங்க. நாலு டிவிட் போடுங்க, அப்படி பண்ணிங்கன்னா இந்தியாவுலயே சிறந்த ஆன்லைன்வாசின்னு எனக்கு ஒரு விருதை கொடுத்துருவாங்க. என்னை பார்க்குறீங்க, ஆரம்பிங்க.. நான் காதை மூடிக்கிடுறேன்.

@writter_vambu

ஒரு காலத்தில் வாழ்ந்து கெட்ட குடும்பத்தை

நினைவுபடுத்துகிறது

பொதிகை தொலைக்காட்சி

@senthilcp

டாக்டர்.சீரகத் தண்ணீர் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்னு"சொல்றாங்களே அது"உண்மையா?

நல்ல"தரமான ஏ ரக தண்ணீர் குடிக்கனும்.பி"ரக ,சி,ரக"லோ க்ளாஸ் தண்ணீர் குடிச்சா"கெடுதல்

@HAJAMYDEENNKS

மீசை முளைக்க ஹார்மோன் தேவையில்லை ஐஸ்க்ரீம் போதும் குழந்தைகளுக்கு...!

@ajay_aswa

வாழ்க்கையில் எதுவும் சொல்லிட்டு வருவதில்லை

ஆனால்

வந்த எதுவும் எதையும் சொல்லிக்கொடுக்காமல் போவதில்லை

@வாசுகி பாஸ்கர்

தளபதி உதயநிதி உருவாக்கப்பட்ட தலைவர் அல்ல, தலைவருக்கான தகுதிக்கு தன்னை பொருத்திக்கொண்டவர். 2018 ஆம் ஆண்டு அரசு பேருந்து கட்டண உயர்வுக்கெல்லாம் தெருவில் இறங்கி போராடியவர், இது வரலாறு.

- 2045 ல் இணையத்தில் பதிவிடப்படப்போகும் ஸ்டேட்டஸ்

@Akku_Twitz

இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்ட பெண் அரசியல் தலைவர் விருதைப் பெற்றார்

தமிழிசை

மெர்சலின் வெற்றிக்கு எப்டி நீங்களோ அதேபோல்தான் உங்களின் இந்த விருதுக்கு மீம்ஸ் கிரியேட்டர்கள்

@VKtwitz_Vicky

தப்பை ஒவ்வொருமுறையும் சரியாக செய்பவர்களுக்கு அறிவுரை சொல்வது தண்ணீர்ல் எழுதுவதை போல தான்...!

@mufthimohamed1

எடப்பாடிக்கு காதுகேளாதோருக்கான கருவி அனுப்பும் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது! - செய்தி

உதவியும் செய்ய மாட்டிங்க, உதவி செய்யரவங்களையும் விட மாட்டிங்க போல.

@vasuki_offl

சில உறவுகள் பட்டாம்பூச்சி

போலவே நல்லா இருக்குன்னு

பிடிச்சி நசு க்கிட கூடாது,

பறக்க விட்டு தான்

ரசிக்கணும்......

@கருப்பு கருணா

"பக்கோடா விற்பவன் கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறான். இதுவும் வேலைவாய்ப்பு தானே" : மோடி

பக்கோடா விற்கும் கடைக்காரங்களே உசாரு...இந்த தொழிலையும் ஏதேனும் வெளிநாட்டுக்கு மொத்தமா குத்தகைக்கு கொடுக்க பிளான் போடுறாருன்னு நினைக்கிறேன்.பார்த்துக்கோங்க சொல்லிட்டேன்!

@Akku_Twitz

ரஜினியின் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் கூகுளில் இருந்து நீக்கம்-செய்தி

அங்கேயும் வாடக பாக்கியோ

@Chellakutty_Dee

முருகனுக்கு ஆறுபடை வீடுன்னா

நமக்கு அறுசுவை வீடு தான்

@Ashok_Apk

என்னமோ இன்னைக்கு சந்திரகிரகணம் நிலா புளூ கலர்ல தெரியும்னு சொன்னாங்க நமக்கு மட்டும் ஏன் மஞ்சள் கலர்ல தெரியுது🤔

அடேய் மதியம் பாத்தா சூரியன்தான் தெரியும் போய்ட்டு சாய்ங்காலம் வா

@ajay_aswa

தன்மானத்துக்கு இழுக்கு வந்தால் மத்திய அரசை எதிர்ப்போம் - எடப்பாடி

தன்மானம் என்றால் உங்க பாசையில் இன்கம்டாக்ஸ் ரெய்டா தல..

@udhayamass1

பேருந்தில் சோக பாடல் ஓடும்

போது எல்லோருக்குள் இருக்கும்

மைக் மோகன் வெளியே வந்து

பாட ஆரம்பித்து விடுகிறார்...!

@Ezhuththaani

இலவசமாய் கிடைக்கும் புழுவுக்கு ஆசைப்பட்டு தூண்டிலில் மாட்டிக்கொண்டது மீன்..!

இதை விடவா உதாரணம் வேண்டும் நமக்கு..!

@ajmalnks

தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் மத்திய அரசை எதிர்ப்போம்-எடப்பாடி

இத்துடன் சிரிச்சா போச்சு ரவுண்டு முடிஞ்சு போச்சு.

@Kozhiyaar

ராஜ்கிரண் இலையில் கிடக்கும் கறி போலவே மிரண்டு போய் நிற்க வேண்டி இருக்கிறது தவறு செய்துவிட்டு மேலாளர் முன் நிற்கும் பொழுது!!

எப்படி கடிச்சு குதற போறாரோ!?

@கருப்பு கருணா

மதமென்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார் வள்ளலார்.

என்ன கொடுமைன்னா..அவரையே இந்துமத சாமியார் மாதிரி ஆக்கிட்டாங்க..!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018