மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

ஆவடி ஆலையை மூடக்கூடாது: மார்க்சிஸ்ட்!

ஆவடி ஆலையை மூடக்கூடாது: மார்க்சிஸ்ட்!

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலக்குழு கூட்டம், இன்று (ஜனவரி 31) சென்னையில் நடைபெற்றது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை எதிர்த்தும், ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூடவுள்ளதைக் கண்டித்தும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், இதற்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வெளியிட்டார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். முதலில், பத்ம விபூஷன் விருது பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாவலர் வரதராஜனுடன் இணைந்து பொதுவுடைமை இயக்க மேடைகளில் இளையராஜா தனது இசைப்பயணத்தை துவக்கியது பற்றியும், எளிய மக்களுக்கு நெருக்கமாக இசையைக் கொண்டு சேர்த்தது குறித்தும் மாநிலக்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் உருக்காலை, உவர்நீர் ஆராய்ச்சி மையம் வரிசையில் ஆவடியில் செயல்படும் ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூடுவதாக மத்திய பாஜக அரசு அறிவித்ததை எதிர்த்து, இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ”நாடு முழுவதும் பல பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை மூடப்போவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கரும்பு, வாழை ஆராய்ச்சி நிலையங்கள், உவர்நீர் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றையும் மூடப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, ஆவடியில் 56 ஆண்டுகளாக இயங்கி வரும் ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையையும் மூடப்போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதனால் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவடி ஆலையை மூடும் முடிவைக் கைவிடுமாறு, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 31 ஜன 2018