மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

ஐபிஎல்: 11 சீசன் விளையாடிய விராட்

ஐபிஎல்: 11 சீசன் விளையாடிய விராட்

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரே அணிக்காக அணிக்காக விளையாடிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் 11ஆவது சீசன் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. அதில் பெங்களூரு அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர் விராட் கோலி முதல் சீசன் முதல் அதே அணிக்காக விளையாடிவருகிறார். இதனால் ஐ,பி.எல் தொடரில் 11 ஆண்டுகளாக ஒரு அணிக்காக விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங் கடந்த 10 வருடங்களாக விளையாடிவந்தார். அவர் இந்த வருடம் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே ஒரே அணிக்காக விளையாடும் ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் 973 ரன்களைச் சேர்த்த விராட் ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அது மட்டுமின்றி இதுவரை மொத்தமாக 4418 ரன்கள் சேர்த்துள்ள அவர், ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை சேர்த்த வீரர் ஆவர். எனவே பெங்களூரு அணி அவரை ஏலத்திற்கு முன்னரே தக்க வைத்துக்கொண்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 31 ஜன 2018