மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

மகள் திருமணம்: விஜய்யை சந்தித்த பார்த்திபன்

மகள் திருமணம்: விஜய்யை சந்தித்த பார்த்திபன்

தனது மகள் கீர்த்தனாவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திரைப் பிரபலங்கள் பலரைச் சந்தித்துவரும் பார்த்திபன் நடிகர் விஜய்யையும் சந்தித்துள்ளார்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர் பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகள் கீர்த்தனா. பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், இயக்குநராகும் லட்சியத்துடன், மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவந்தார். மேலும் தற்போது ஒரு சினிமா இயக்கும் முயற்சியிலும் இருக்கிறார்.

இந்நிலையில், கீர்த்தனாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்யை மணக்கவிருக்கிறார். இருவருக்கும் இரு வீட்டார் சார்பில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 8ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஹோட்டல் லீலா பேலஸில் காலையில் திருமணமும், மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கவுள்ளன. இதில் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

இது சம்பந்தமாக நடிகர் பார்த்திபன் சமீப காலமாக திரைப் பிரபலங்கள் பலரைச் சந்தித்துவருகிறார். தனது மகள் கீர்த்தனாவின் திருமணத்திற்கு அவர் நேரில் சென்று அழைக்கவே இத்தகைய சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். ரஜினி, கமல், ஏ.ஆர். ரஹ்மான், விக்ரம் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களை சந்தித்தார். இந்நிலையில் விஜய்யின் வீட்டிற்குச் சென்று தனது மகளின் திருமணத்திற்கு குடும்பத்துடன் வருமாறு அழைப்பிதழ் வைத்ததுடன் அவர்களோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அந்தச் சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதுடன்,

“உயரம் எப்படி ஆழத்தில்?

அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!

அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம்.

சிரிப்பில் கூட இதயம் விஜயம்!

மகனின் பெருமை பூரிப்பாக,

ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!”

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 31 ஜன 2018