முற்றிப்போகும் தேங்காய் உற்பத்தி!

தேங்காய் பறிப்புக்கு போதிய ஆள் பலம் இல்லாமை மற்றும் விவசாயிகளிடையே குறைந்து வரும் ஆர்வம் போன்ற காரணங்களால் கோவா மாநிலத்தில் தேங்காய் உற்பத்தி சரிவை நோக்கிச் செல்கிறது.
ஒரு காலத்தில் தேங்காய் உற்பத்திக்குப் பெயர் போன, கோவா மாநிலத்தில் விலை உயர்வால் தேங்காய் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவாவில் சுமார் 25,700 ஹெக்டேர் பரப்புக்குத் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அதிகரித்து வரும் விலையால் சாதாரண மக்கள் தேங்காய் வாங்குவது குறைந்து வருகிறது. உள்ளூர் சந்தைகளில் தேங்காய் ஒன்றின் விலை 40 முதல் 50 ரூபாய் வரையில் இருக்கிறது. இதனால் தேங்காய்க்கு மானியம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு அம்மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது.