மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

அன்புச்செழியன் வந்ததில் தவறில்லை: அமைச்சர்!

அன்புச்செழியன் வந்ததில் தவறில்லை: அமைச்சர்!

தனது இல்ல விழாவில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கலந்துகொண்டதில் எந்த தவறும் இல்லை என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 28ஆம் தேதியன்று மதுரை பாண்டிகோவிலில், தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு இல்ல விழா நடந்தது. இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட தமிழக அமைச்சரவையைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கந்துவட்டி புகாருக்கு ஆளான சினிமா பைனான்சியர் அன்புச்செழியனும் கலந்துகொண்டார். அவர், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருடன் பேசியதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், தனது இல்ல விழாவுக்கு அன்புச்செழியன் வந்ததில் தவறில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

“அன்புச்செழியன் தேடப்படும் குற்றவாளி கிடையாது. பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை, அவர் சட்டரீதியாகச் சந்தித்து வருகிறார். சினிமா துறையில் உள்ளவர்கள் அன்புச்செழியன் நல்லவர் என்று கூறுகின்றனர். அதனால், அவர் எனது இல்ல விழாவில் கலந்துகொண்டதை சர்ச்சையாக்குவது தேவையற்றது” என்று செல்லூர் ராஜு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018