மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

வட சென்னை பின்னணியில் விஸ்வாசம்!

வட சென்னை பின்னணியில் விஸ்வாசம்!

அஜித் நடிக்கவுள்ள விஸ்வாசம் படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு தயாராகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட நிலப்பரப்பைச் சார்ந்த படங்கள் அதிக அளவில் வெளியாகிவருகின்றன. 90களில் கோவை, பொள்ளாச்சி பகுதியைக் கதைக்களமாகக் கொண்டு அதிக அளவில் படங்கள் வெளிவந்தன. அதன் பின் மதுரை மற்றும் தென் மாவட்டங்களைச் சுற்றி எடுக்கப்பட்ட படங்கள் கணிசமாக வரத் தொடங்கின. தற்போது சென்னையை, குறிப்பாக வட சென்னையை மையமாக கொண்டு அதிக அளவில் படங்கள் வெளியாகின்றன. சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படமும் இந்தப் பின்னணியில் உருவாகவுள்ளது.

கடந்த டிசம்பர் 7ஆம் தேதி படத்திற்குப் பூஜை போடப்பட்டது. படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் ஜனவரி 18ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. படக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் இதை மறுத்துள்ளனர். “பிப்ரவரி மாதத்தின் கடைசி வியாழக்கிழமையான 22ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கப் படக் குழு திட்டமிட்டுள்ளது. வடசென்னையைப் பின்புலமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடையும்” எனக் கூறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018