மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

ரயிலில் வன்முறை: மாணவர்களைத் தேடும் போலீசார்!

ரயிலில் வன்முறை: மாணவர்களைத் தேடும் போலீசார்!

கல்லூரி மாணவர்கள் ரயில்களில் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுவது தொடர்கதையாகிவரும் நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுள் மோகன் என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு ஜனவரி 30 அன்று மதியம் 3 மணியளவில் மின்சார ரயில் ஒன்று சென்றது பட்டரவாக்கம் ரயில் நிலையத்தை அடைந்ததும் அதில் பயணித்த பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தி அரிவாளுடன் வன்முறையில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் திருநின்றவூர் , அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், தினேஷ்குமார், அஜீத் ஆகிய 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளைக் காட்டிலும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த வன்முறை குறித்து அம்பத்தூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முத்துபாண்டி, மோகன் இருவரும் தற்போதும் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதில் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று (ஜனவரி 31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர். ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ‘ரூட் தலை’யாகச் செயல்பட்ட யுவராஜ், ஹரி உள்ளிட்ட மாணவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 31 ஜன 2018