மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

ஐபிஎல்: காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்!

ஐபிஎல்: காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டித் தொடரில் சென்னை அணி மீண்டும் களமிறங்கவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டு வருட இடைவேளைக்குப் பின்னர் போட்டியைக் காண ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்,

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை விளையாடினார். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி-20 தொடர்களில் பங்கேற்றுள்ள அவர் இதுவரை தான் விளையாடிய அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்தான் சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை அணிக்காக அவர் விளையாடிய பொழுது 2013, 2015 ஆகிய இரண்டு வருடங்களும் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "சென்னை அணி ஐபிஎல் தொடருக்குத் திரும்புவது மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வு. நான் இதுவரை விளையாடிய அணிகளில் மிக சிறந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி, ரெய்னா, மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்களையும், புதிதாக அணியில் இணைந்துள்ள ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு போன்றவர்களையும் காண மிகுந்த ஆர்வமாக உள்ளேன். தோனி தலைமையில் செயல்பட்டுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகளாவிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மஞ்சள் நிற உடையணிந்து மீண்டும் சென்னை அணி களத்தில் இறங்குவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018