மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

விவசாயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம்!

விவசாயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம்!

விவசாயத் துறையில் பெண்களின் பங்களிப்பை 30 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என 2017-18 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெண் விவசாயிகளுக்குச் சொந்தமாக குறைவான நிலங்களே இருப்பதாகவும், அந்த அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 29ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வறிக்கையில் பெண் விவசாயிகளுக்கென 30 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்வதற்குப் பரிந்துரை செய்துள்ளது. அந்த அறிக்கையில், “உலக அளவில் உணவு மற்றும் வேளாண் - பல்லுயிர்த் தன்மை பாதுகாத்தலிலும் பெண்களுக்கு பெரும் பங்கு உண்டு. பெரும்பாலான கிராமப்புற ஆண்கள் நகர்ப்புறம் நோக்கி வருவதால் தற்போது விவசாய நிலங்கள் பெண்களை நம்பியே உள்ளன. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த பெண் தொழிலாளர்களில் விவசாயத் தொழிலாளர்கள் 55 சதவிகிதமும் விவசாய உற்பத்தியாளர்கள் 24 சதவிகிதமும் ஆவர். பாலின வேறுபாட்டினால் விவசாய நிலத்தின் உரிமையாளர்களாக நாட்டில் மொத்தம் 12.8 சதவிகித பெண்களே இருக்கிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018