மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

பிப்ரவரி 6: அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பிப்ரவரி 6: அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பேருந்துக் கட்டண உயர்வு விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக ஆலோசிக்க பிப்ரவரி 6ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் இன்று (ஜனவரி 31) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன். அவற்றை நிறைவேற்றுவேன். நவீன வசதிகள் அடங்கிய திருமணக் கூடம் விரைவில் இப்பகுதியில் அமையவுள்ளது” எனத் தொகுதியின் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வரைத் தமிழக முதல்வர் சந்திக்கவுள்ளார் என்ற தகவல் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்த அவர், “தமிழகத்தில் உள்ள விவசாயிகள், அனைத்துக் கட்சி தலைவர்கள் போன்றவர்களை அழைத்துச் சென்று கர்நாடகாவுக்கு அழுத்தம் தர வேண்டும். தேவைப்பட்டால் டெல்லிக்கே அழைத்துச் சென்று பிரதமரையும் சந்தித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

வேலூரில் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், “போராட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்கை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

பேருந்துக் கட்டண உயர்வு விவகாரத்தில் அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்து முடிவு செய்ய பிப்ரவரி 6ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018