மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

சந்தித்துக்கொண்ட கின்னஸ் சாதனையாளர்கள்!

சந்தித்துக்கொண்ட கின்னஸ் சாதனையாளர்கள்!

உலகின் உயர மனிதரான சுல்தான் கோசனும், உலகின் குள்ள பெண்மணியான ஜோதி அம்கேவும் எகிப்து நாட்டில் சந்தித்துக்கொண்டனர்.

எகிப்து சுற்றுலாத் துறை சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஜோதி அம்கே, சுல்தான் கோசனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சந்திப்பின் முழு செலவையும் எகிப்து சுற்றுலாத் துறையே ஏற்றுக்கொண்டது.

இந்தியாவைச் சேர்ந்த ஜோதி அம்கே என்ற 25 வயது இளம்பெண் உலகின் மிக குள்ளமான பெண் ஆவார். இவரின் உயரம் 62.8 செ.மீ. துருக்கி நாட்டைச் சேர்ந்த 35 வயதான சுல்தான் கோசன் உலகின் மிக உயர மனிதர் ஆவார். இவரது உயரம் 8 அடி 3 அங்குலம்.

சுல்தான் கோசன் துருக்கி நாட்டைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். பிட்டியூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக இவரது உயரம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. அதிக உயரத்தின் காரணமாக இவரால் ஊன்றுகோலின் துணையின்றி நடக்க முடியாது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 31 ஜன 2018