மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 ஜன 2018

மூன்றாவது நீர்மூழ்கி மும்பையில் அறிமுகம்!

மூன்றாவது நீர்மூழ்கி மும்பையில் அறிமுகம்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான INS கரன்ஜ் இன்று (ஜனவரி 31) மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் 75வது திட்டத்தின் கீழ் இந்திய கப்பல் தயாரிப்பு நிறுவனமான மசாகன் டாக் லிமிடெட் நிறுவனம் (MDL) வடிவமைத்துள்ள INS கரன்ஜ், மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலாகும். முன்னதாக பிரஞ்சு கடற்படை பாதுகாப்பு நிறுவனமும் இந்தியாவின் MDL நிறுவனமும் இணைந்து மும்பையில் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை வடிவமைக்கத் திட்டமிட்டிருந்தது. அதன்படி கடந்தாண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பலான INS கல்வாரி அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, INS காந்தாரி என்ற இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டிற்குள் 6 கப்பல்களும் அறிமுகப்படுப்படும் என இந்திய கப்பற்படை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்குக் கடற்படை தளபதி சுனில் லன்பா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 31 ஜன 2018