10GB ரேம் வசதியுடன் முதல் ஸ்மார்ட்போன்!


விவோ நிறுவனம் 10GB ரேம் வசதியுடன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது.
சீன நிறுவனமான விவோ கடந்த 2009ஆம் ஆண்டு சீனாவில் நிறுவப்பட்டு, ஸ்மார்ட்போன் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மொபைல் விற்பனையை மேற்கொண்டுவரும் விவோ நிறுவனம், ஐபிஎல் தொடரின் மூலம் மிகவும் பிரபலமடைந்தது. விவோ நிறுவனம் சமீபத்தில் 4GB ரேம் வசதியுடன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்து பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக 10GB ரேம் வசதியுடன் கூடிய புதிய மாடலை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
Xplay7 என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலில் 256 GB அல்லது 512 GB இன்டர்னல் வசதியுடன் கூடிய இரண்டு வகைகள் வெளிவர உள்ளன. பிங்கர் பிரின்ட் வசதி மற்றும் ஸ்னேப்டிராகன் 845 வசதியுடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த மாடலின் பிற வசதிகள் மற்றும் அதிகாரபூர்வ வெளியீடு குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்திலோ இந்த மாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.